புதுக்கோட்டை

உணவுப்பொருள் வழங்கும் கிடங்கில் ஆய்வு

7th Sep 2019 10:21 AM

ADVERTISEMENT

இலுப்பூரிலுள்ள உணவுப் பொருள் கிடங்கில், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் பத்மசங்கர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தார்.
நியாயவிலைக் கடைகளில் உணவுப் பொருள்களை வாங்கச் செல்லும் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருள்கள் வழங்குவதில் காலதாமதம் ஏற்படாத வகையில்,  தேவையான அளவில் உணவுப் பொருள்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். நியாயவிலைக் கடைகளுக்கு பொருள்களைக் கொண்டு செல்லும் பணிகளை துறை அலுவலர்கள் துரிதப்படுத்தி அனுப்ப வேண்டும்.
 உணவுப் பொருள்கள் இருப்பு இல்லை எனக்கூறி, எக்காரணத்தைக்கொண்டும் நுகர்வோரை திருப்பி அனுப்பும் நிலை இருக்கக்கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
இதையொட்டி உணவுப்பொருள்கள் அனுப்பும் பணிகளை கண்காணிக்கவும், கிடங்குகளில் உணவுப்பொருள் இருப்பைத் தணிக்கை செய்யும் பணிகளிலும் துறை உயரதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக,  விராலிமலை-இலுப்பூர் சாலையில் சாங்கிராப்பட்டியிலுள்ள உணவுப்பொருள் கிடங்கில், தமிழ்நாடு உணவுப்பொருள் வழங்கல் மற்றும்  பாதுகாப்புத்துறை உதவி ஆணையர் பத்மசங்கர் ஆய்வு செய்து உணவுப்பொருளின் தரம், இருப்பு அளவு ஆகியவற்றை கேட்டறிந்தார். மேலும் பதிவேடுகளையும் ஆய்வு செய்தார். 
பறக்கும் படை  வட்டாட்சியர்  தமிழ்மணி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT