புதுக்கோட்டை

இளைஞர் பெருமன்றத்தினர் ஆர்ப்பாட்டம்

7th Sep 2019 10:20 AM

ADVERTISEMENT

வாரிசுசான்று உள்ளிட்ட சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வலியுறுத்தி,  ஆலங்குடியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம்,  இந்திய மாதர் சம்மேளனத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆலங்குடி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற ஒன்றியச் செயலர் தர்ம.பிரசாத் தலைமை வகித்தார். இந்திய மாதர் தேசிய சம்மேள ஒன்றியச் செயலர் இந்திராணி, ஒன்றியத் தலைவர் பிரேமா  முன்னிலை வகித்தனர். 
அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலர் ராஜேந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் சொர்ணகுமார் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 
ஆர்ப்பாட்டத்தில்,வாரிசு சான்று, பட்டா மாறுதல் உள்ளிட்ட சான்றுகளை தாமதமின்றி வழங்க வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT