புதுக்கோட்டை

மதுவிற்ற தந்தை, மகன் கைது

4th Sep 2019 08:52 AM

ADVERTISEMENT

கந்தர்வகோட்டையில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த தந்தை, மகனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 
கந்தர்வகோட்டை காவல் உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீஸார், கந்தர்வகோட்டை - கறம்பக்குடி சாலையில் வாகன தணிக்கை செய்தனர். 
அப்போது கந்தர்வகோட்டையை அடுத்த காட்டுநாவல் கிராமத்தைச் சேர்ந்த கேசவன் (57), அவரது மகன் பாண்டியன் (32) ஆகிய இருவரும் மதுபான பாட்டில்களை மோட்டார் சைக்கிளில் வைத்துக்கொண்டு, அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இருவரையும் கைதுசெய்த போலீஸார், அவர்களிடமிருந்து 18 மது பாட்டில்கள், ரூ. 800 ரொக்கம் மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT