புதுக்கோட்டை

புதுகை அங்கன்வாடி களப்பணியாளர்களுக்கு  விரைவில் ஸ்மார்ட் செல்லிடப்பேசிகள்

4th Sep 2019 08:50 AM

ADVERTISEMENT

ஊட்டச்சத்து குறைபாடில்லாத குழந்தைகளை உருவாக்கும் திட்டத்தின் முன்னேற்றப் பணிகளைப் பதிவேற்றும் வகையில் களப்பணியாளர்களுக்கு ஸ்மார்ட் செல்லிடப்பேசிகள் வழங்கப்படவுள்ளன என்று மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி தெரிவித்தார்.
மத்திய அரசின் "போஷான் அபியான்' திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் நடத்தப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் இயக்குநர் கவிதா ராமு செவ்வாய்க்கிழமை காணொலிக் காட்சியில் ஆய்வு நடத்தினார்.
புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ரேணுகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) இமாம் ஜாபர் உசேன்,  மாவட்ட வழங்கல் அலுவலர் அக்பர் அலி உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
இந்த ஆய்வுக் கூட்டம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி கூறியது:
ஊட்டச்சத்துள்ள குழந்தைகளை உருவாக்கும் வகையில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இப்பணிகளை அவ்வபோது பதிவேற்றும் வகையில் மாவட்டம் முழுவதும் செயல்பட்டு வரும் 199 அங்கன்வாடி களப்பணியாளர்களுக்கு ஸ்மார்ட் செல்லிடப்பேசிகள் விரைவில் வழங்கப்படவுள்ளன என்றார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT