புதுக்கோட்டை

சர்க்கரை நோயாளிகளுக்கு அரசு மருத்துவமனைகளில் 30 நாள்களுக்கு மாத்திரைகள் வழங்கக் கோரிக்கை

4th Sep 2019 08:50 AM

ADVERTISEMENT

சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் 30 நாள்களுக்கு மொத்தமாக சேர்த்து மாத்திரைகள் வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டையில் இச்சங்கத்தின் மாவட்ட  செயற்குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் துணைத் தலைவர் எம். முத்தையா தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் பி. ஆழ்வாரப்பன், என். ராமச்சந்திரன், ஆர். ராஜேந்திரசிங், ஆர். சுப்பிரமணியன், எம். வெள்ளைச்சாமி, கே. சதாசிவம், ஆர். முருகேசன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
புதுக்கோட்டை நகர குடியிருப்புகளில் இருந்து போக்குவரத்து வசதிக்காக  ஷேர் ஆட்டோக்களை இயக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் பிரச்னையைத் தீர்க்க போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் தற்போது 15 நாள்களுக்கு ஒரு முறை அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. 
பெரும்பாலும் வயதானவர்களே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு 30 நாள்களுக்கும் சேர்த்து மொத்தமாக மாத்திரைகள் வழங்க மருத்துவத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT