புதுக்கோட்டை

கார்னிவல் கல்லூரியில் தொழுநோய் அறியும் பயிற்சி

4th Sep 2019 08:51 AM

ADVERTISEMENT

அறந்தாங்கி கார்னிவல் தொழுநோய் பயிற்சிக் கல்லூரியில், தொழுநோய் அறியும் கலந்தாய்வு பணிக்கான பயிற்சி மாணவிகளுக்கு செவ்வாய்க்கிழமை அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட மருத்துவ பணிகள் துணை இயக்குநர் (தொழுநோய்) எஸ்.சிவகாமி பேசுகையில், தொழுநோய் பரவும் விதம், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை முறைகள் குறித்து விளக்கினார்.
 மேலும், தொழுநோய் அறிகுறிகள் இருந்தும் வெட்கம் காரணமாக பலர் வெளியில் சொல்லாமல் நோய் முற்றிய நிலையிலேயே சிகிச்சைக்கு வருகின்றனர். அதுபோன்ற நோயாளிகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் ஆரம்ப கட்டத்திலேயே சரி செய்யலாம். உங்கள் குடும்பத்தில் அல்லது உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தொழுநோய் அறிகுறிகள் இருந்தால் அவர்களை கண்டறிந்து சிகிச்சையளிக்க வேண்டும் என்றார். புதுக்கோட்டை மாவட்ட நலக்காப்பாளர் ஜீ.வி, சுகாதார ஆய்வாளர் விஸ்வநாதன் உள்ளிட்டோர் பேசினர். நிகழ்ச்சிக்கு, கல்லூரி முதல்வர் ரெங்கசாமி தலைமை வகித்தார். ஆசிரியர் எஸ்.விநோதினி வரவேற்றார். நிறைவில் ஆசிரியர் ஆர்.நிர்மலா நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT