புதுக்கோட்டை

இலவச எரிவாயு இணைப்பு வழங்கல்

4th Sep 2019 08:53 AM

ADVERTISEMENT

அன்னவாசல் அருகேயுள்ள கீழக்குறிச்சியில் பிரதம மந்திரியின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 50 குடும்பங்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவில் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கலந்துகொண்டு 50 குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்புகளை வழங்கினார். 
பின்னர் அவர் பேசுகையில், உஜ்வாலா திட்டத்தின் மூலம் இதுவரை 8 கோடி குடும்பங்களுக்கு இலவச இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், எரிவாயு அடுப்பின் நன்மைகள், எரிவாயுவை சிக்கனமாகவும், பாதுகாப்பாகவும் பயன்படுத்தும் முறைகள் குறித்து எடுத்துக் கூறினார். அன்னவாசல் ரஹமத் இன்டேன் கேஸ் இயக்குநர் முகமது அப்சல் நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT