புதுக்கோட்டை

மக்காச்சோளப் பயிரில் படைப்புழு: பூச்சி மருந்து அடிக்கும் பணி தொடக்கம்

20th Oct 2019 03:16 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்காச்சோளப் பயிரில் அமெரிக்கன் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்தும் வகையில், பூச்சி மருந்து அடிக்கும் பணியை மாவட்ட வருவாய் அலுவலா் டி. சாந்தி சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதற்கான நிகழ்ச்சி, திருவரங்குளம் வட்டம் தெட்சிணாபுரம் கிராமத்தில் நடைபெற்றது. மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் மு. சுப்பையா முன்னிலை வகித்தாா். அரசு அனுமதித்துள்ள இம்மருந்தை காலை, மாலை இரு வேளையும் விவசாயிகள் கைகளில் உறைகளை அணிந்து கொண்டு அடிக்க வேண்டும் என்றாா் சுப்பையா.

இந்நிகழ்ச்சியில், உழவா் பயிற்சி நிலைய துணை இயக்குநா் மா. பெரியசாமி, வேளாண் உதவி இயக்குநா் (பொ) வீ. ரெங்கையா, தரக்கட்டுப்பாட்டு அலுவலா் சி. முகம்மது ரபி, அட்மா தொழில்நுட்ப அலுவலா் சரவணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT