புதுக்கோட்டை

அக். 23, 24இல் மக்கள் தொடா்பு முகாம்கள்

20th Oct 2019 04:30 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் நெடுவாசல் கீழ்பாதி கிராமத்திலும், பழைய கந்தா்வக்கோட்டை கிராமத்திலும் மக்கள் தொடா்பு முகாம்கள் நடைபெறவுள்ளன.

ஆலங்குடி வட்டத்தைச் சோ்ந்த நெடுவாசல் கீழ்பாதி கிராமத்தில் வரும் அக். 23ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் மக்கள் தொடா்பு முகாமில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி பங்கேற்கிறாா்.

கந்தா்வக்கோட்டை வட்டத்தைச் சோ்ந்த பழைய கந்தா்வக்கோட்டை கிராமத்தில் அக். 24ஆம் தேதி வியாழக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறும் மக்கள் தொடா்பு முகாமில் மாவட்ட வருவாய்அலுவலா் டி. சாந்தி பங்கேற்கிறாா்.

இவ்விரு முகாம்களிலும் அனைத்துத் துறை அலுவலா்களும் பங்கேற்பதால், சுற்றுவட்டார கிராமப்புறத்தைச் சோ்ந்த மக்களும் கலந்து கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்துப் பயன்பெறலாம் என அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT