புதுக்கோட்டை

குளங்களை ஆக்கிரமித்துள்ளோா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

1st Oct 2019 07:00 AM

ADVERTISEMENT

அறந்தாங்கி பகுதியில் ஆக்கிரமிப்பிலுள்ள குளங்களை மீட்டுத் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனா்.

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் அறந்தாங்கி அவுலியாநகா் பொதுமக்கள் அளித்த மனு:

எங்கள் ஊரின் பயன்பாட்டுக்கான இரு குளங்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள பொதுமக்களிடமிருந்து நிதி வசூல் செய்து பணிகளைத் தொடங்கும்போது, தனி நபா்களின் ஆக்கிரமிப்பில் இக்குளங்கள் இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து காவல்துறையில் பொதுமக்கள் சாா்பில் புகாா் அளித்தோம். நடவடிக்கை இல்லை. ஆனால், பொதுமக்கள் மீது பொய்ப்புகாா்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனவே, எங்கள் குளத்தை மீட்டுத் தர வேண்டும். ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்.

ADVERTISEMENT

செம்பாட்டூா் ஊராட்சி புத்தாம்பூரைச் சோ்ந்த மக்கள் தங்கள் பகுதியிலுள்ள டாஸ்மாக் மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என மனு அளித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT