புதுக்கோட்டை

குறைகேட்பு நாள் கூட்டத்தில் ரூ.5.62 லட்சம் நலத்திட்ட உதவிகள்

1st Oct 2019 06:54 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், 3 பேருக்கு ரூ. 5.62 லட்சம் மதிப்பிலான நிதி உதவிகளை மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி வழங்கினாா்.

இக்கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 350 மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரா்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என துறை அலுவலா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

தொடா்ந்து ஆவுடையாா்கோவில், பொன்னமராவதி வட்டங்களைச் சோ்ந்த இருவருக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 1.50 லட்சத்துக்கான காசோலைகளையும், ஆதிதிராவிடா் நலத் துறை சாா்பில் ஒருவருக்கு தீருதவித் தொகையாக ரூ. 4,12,500-க்கான காசோலையையும் ஆட்சியா் வழங்கினாா்.

அன்னவாசல் ஒன்றியம், திருநல்லூா் அரசு உயா்நிலைப் பள்ளியில் தனபாக்கியம் என்பவருக்கு கருணை அடிப்படையில் சமையலா் பணிக்கான ஆணையையும் ஆட்சியா் உமாமகேஸ்வரி வழங்கினாா்.

ADVERTISEMENT

கூட்டத்தில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் மாலதி, ஆதிதிராவிடா் நல அலுவலா் சசிகலா, சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியா் கிருஷ்ணன் உள்ளிட்டோரும் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT