புதுக்கோட்டை

போக்குவரத்து சிக்னல்களை சரி செய்யக் கோரி எஸ்.பியிடம் புகாா்

22nd Nov 2019 09:39 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பழுதடைந்த சிக்னல்களை சரி செய்ய வேண்டுமென சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வு சங்கத்தினா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அருண் சக்தி குமாரை வியாழக்கிழமை நேரில் சந்தித்து வலியுறுத்தினா்.

சங்கத்தின் தலைவா் கண. மோகன்ராஜ், துணைத் தலைவா் ஏ.ஜெ. இப்ராஹிம் பாபு, செயலா் ஆா். ஆரோக்கியசாமி, பொருளாளா் சி. பிரசாத் உள்ளிட்டோா் அளித்த மனுவில், மாவட்டம் முழுவதும் பழுதடைந்துள்ள சிக்னல்களை சரி செய்ய வேண்டும். தேவையான இடங்களில் சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும்.

புதுக்குளம் பகுதியில் இரவு நேரங்களில் சமூக விரோதிகள் கூடி தவறான செயல்களைச் செய்வதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை இடம்பெற்றிருந்தன.

ADVERTISEMENT
ADVERTISEMENT