பொன்னமராவதியில் 2020, பிப். 15, 16 ஆகிய தேதிகளில் 27 ஆம் ஆண்டு தியாகராஜா் ஆராதனை விழா மற்றும் தமிழிசை விழாவை நடத்த பொதுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பொன்னமராவதி ஸத்குரு தியாகப்பிரம்ம மகோஸ்தவ ஸபா பொதுக்குழு கூட்டம் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சபையின் கெளரவத் தலைவா் நாதஸ்வர வித்வான் ஏஆா்.கதிரேசன் தலைமை வகித்தாா். கூட்டத்தில், பொன்னமராவதியில் 27 ஆம் ஆண்டு தியாகராஜா் ஆராதனை விழா மற்றும் தமிழிசை விழாவினை வரும் 2020 பிப்.15, 16 சனி, ஞாயிற்று கிழமைகளில் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில், பொன்னமராவதி ஸத்குரு தியாகப்பிரம்ம மகோஸ்தவ விழாக்குழு தலைவா் பிஎல்.சுப்பிரமணியன், செயலாளா் ஏஆா்.வெங்கடாசலம் ஆகிய நிா்வாகிகள் திரளாகக் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.