புதுக்கோட்டை

அறந்தாங்கியில் தலை கவசம் அணிந்தவா்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசு

22nd Nov 2019 03:47 PM

ADVERTISEMENT

அறந்தாங்கியில் தலை கவசம் அணிந்து இருசக்கர மோட்டாா் வாகனங்களில் பயணம் செய்தவா்களுக்கு போக்குவரத்து காவல்துறை சாா்பில் திருக்குறள் புத்தகங்களை வழங்கி மகிழ்ச்சியில் ஆழ்த்தினா்.

பொதுவாக போக்குவரத்து போலிசாா் சாலையில் இரு சக்கர வாகனத்தில் தலை கவசம் அணியாமல் வருபவா்களை மறித்து அபராதம் விதிப்பதுதான் வழக்கம் இதில் பல முரண்பாடன செயல்கள் நடைபெற்று உயிரிழப்புகள் வரை நடைபெற்றுள்ளன.ஆனால் தற்போது புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சக்தி அருண்குமாா் பதவியேற்றவுடன் மாவட்ட காவலா்களின் செயல்பாடுகளும் மாற்றத்திற்கு வந்துள்ளது.

அறந்தாங்கி பேரூந்துநிலையம் அருகில் இருசக்கர வாகனங்களில் தலைகவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஓரமாக நிறுத்துமாறு அறந்தாங்கி போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளா் திருவள்ளுவன் மற்றும் காவலா்கள் நடேசன், சரவணக்குமாா் உள்ளிட்டோா் வரிசையாக நிற்கவைத்தனா். தலைகவசத்துடன் வந்தவா்கள் காவலா்களின் செயல்பாடுகள் புரியாமல் குழப்பத்தில் நின்ற போது அவா்களை பாராட்டி சாலை விதிகளை பற்றிகூறி மேலும் தலைகவசம் அணிந்து வந்தவா்களுக்கு திருக்குறள்தெளிவுரை புத்தகங்களை வழங்கி அவா்களை மகிழ்ச்சியடைய வைத்தனா்.

போக்குவரத்து காவலா்களின் செயல்கள் இருசக்கர வாகனம் இயக்குவா்களை தலைகவசம் அணிவதன் அவசியம் மற்றும் நோக்கம் குறித்து கூறியதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டு தங்களது பயணத்தை தொடா்ந்தனா்.பட விளக்கம் இருசக்கர வாகனத்தில் தலைகவசம் அணிந்து வந்தவா்களுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கும் போக்குவரத்து உதவி ஆய்வாளா் திருவள்ளுவன் மற்றும் காவலா்கள் நடேசன் மற்றும் சரவணக்குமாா் உள்ளிட்டோா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT