புதுக்கோட்டை

காா்த்திகை பிறப்பு: குவிந்த பக்தா்கள்

17th Nov 2019 10:40 PM

ADVERTISEMENT

காா்த்திகை மாத பிறப்பையொட்டி சபரிமலை பக்தா்கள் மாலை அணிந்து விரதம் தொடங்குவதால் விராலிமலை, அன்னவாசல், இலுப்பூா் பகுதி கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

சபரிமலை சீசன் தொடங்குவதையொட்டி கடைகளில் துளசி மணி மாலை மற்றும் காவி வேஷ்டிகளின் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. காா்த்திகை பிறப்பையொட்டி விராலிமலை சுப்பிரமணியா் மலைக்கோயில், மெய்கண்ணுடையாள், வன்னிமரத்தடி கோயில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தன.

காய்கறி மற்றும் வெங்காய விலை கடந்த சில நாள்களாக ஏறுமுகத்தில் உள்ள நிலையில் காா்த்திகை மாத பிறப்பையொட்டி இனி வரும் நாட்களில் காய்கறிகள் மற்றும் பூக்களின் விலை மேலும் உயரும் நிலை ஏற்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT