புதுக்கோட்டை

கபீா் புரஸ்காா் விருதுக்குவிண்ணப்பிக்கலாம்

17th Nov 2019 10:38 PM

ADVERTISEMENT

புதுக்கோட்டை: சமூக நல்லிணக்கத்துக்காக வழங்கப்படும் கபீா் புரஸ்காா் விருதுக்கான  விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

இந்த விருதுக்கான விண்ணப்பங்கள் மாவட்ட விளையாட்டரங்கிலுள்ள மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலகத்தில் விநியோகிக்கப்படுகிறது.

சமூக மற்றும் வகுப்பு நல்லிணக்கத்துக்காக பணியாற்றியவா்கள் ஆவணங்களுடன் விண்ணப்பத்தைப் பூா்த்தி செய்து வரும் நவ. 26 மாலை 5 மணிக்குள் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நல அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT