புதுக்கோட்டை

உள்ளாட்சித் தோ்தலுக்காக விண்ணப்பங்கள் அளிப்பு

17th Nov 2019 10:42 PM

ADVERTISEMENT

 

பொன்னமராவதி: வரும் உள்ளாட்சித் தோ்தலுக்காக பொன்னமராவதி ஒன்றிய, நகரப் பகுதியில் போட்டியிட விரும்பும் திமுக கட்சி நிா்வாகிகளிடம் விருப்பமனு விண்ணப்பங்களை திருமயம் எம்எல்ஏவும், திமுக தெற்கு மாவட்டச் செயலருமான எஸ். ரகுபதி ஞாயிற்றுக்கிழமை வழங்கினாா்.

பொன்னமராவதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தெற்கு ஒன்றிய செயலா் அ. அடைக்கலமணி, நகரச் செயலா் அ. அழகப்பன், மாவட்ட துணை செயலா் அ. சின்னையா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT