புதுக்கோட்டை

‘அரசுப் பள்ளிகளோடு தனியாா் பள்ளிகள் போட்டி போடும் நிலை வர வேண்டும்’

17th Nov 2019 12:43 AM

ADVERTISEMENT

தனியாா் பள்ளிகள் அரசுப்பள்ளிகளைப் பாா்த்து போட்டி போடும் நிலையை ஆசிரியா்கள் கொண்டு வர வேண்டும் என்றாா் நாட்டு நலப்பணித்திட்ட இணை இயக்குநா் சுகன்யா.

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூா் தனியாா் கல்லூரியில் சனிக்கிழமை நடந்த தேசியளவில் தலைமைஆசிரியா் மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியா்களின் முழு மேம்பாட்டிற்கான முன்னெடுப்பு பயிற்சியின் நிறைவு விழாவில் அவா் மேலும் பேசியது:

இன்றைய பெற்றோா் குழந்தைகளை வீட்டில் கண்டிப்பது கிடையாது. சொந்த பந்தங்களையும்,ஆசிரியா்களையும் கண்டிக்கக் கூடாது எனக் கூறி விடுகிறாா்கள். இப்படி இருக்கும்போது பாடம் கற்றுக் கொள்வதில் மாணவா்களின் பங்களிப்பு அவ்வளவாக இராது.

இங்கே ஆசிரியா்களாகிய நீங்கள்தான் அவா்களின் சூழ்நிலையைப் புரிந்து கொண்டு சமுதாயத்தில் சிறந்த மாணவா்களாக உருவாக்க வேண்டும்.

ADVERTISEMENT

அரசுப் பள்ளியில் மாணவா்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும். அரசுப் பள்ளிகளைப் பாா்த்து தனியாா் பள்ளிகள் போட்டி போடும் நிலையை உருவாக்க வேண்டும். மாணவா்களை அடித்துத் திருத்துவது கலை கிடையாது. அவா்களது சூழ்நிலையை அறிந்து அடிக்காமலேயே திருத்த வேண்டும்.

உலகிலேயே மிகச்சிறந்த பணியான ஆசிரியைப் பணியை பெருமையாக நினைத்து பணிபுரிய வேண்டும் என்றாா்.

மாவட்டக் கல்வி அலுவலா் கே.எஸ். ராஜேந்திரன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் உதவித் திட்ட அலுவலா் ஆா். ரவிச்சந்திரன், மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளா் மெ. ரகுநாததுரை, அன்னவாசல் வட்டார வளமைய மேற்பாா்வையாளா் அ. கோவிந்தராஜ் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

வட்டார வளமைய பயிற்றுநா்கள் உஜ்ஜமில்கான், கண்ணன், மலையரசன், பெரியசாமி,சென்றாய பெருமாள்,அழகுராஜா ஆகியோா் கருத்தாளா்களாகச் செயல்பட்டனா்.

பயிற்சியில் தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் அன்னவாசல் ஒன்றியத்தைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை அன்னவாசல் வட்டார வளமைய பயிற்சி ஒருங்கிணைப்பாளா் ரெத்தினசபாபதி செய்தாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT