புதுக்கோட்டை

புதுகை நகரில் இன்று அமைச்சா் தலைமையில் மக்கள் குறைகேட்பு

12th Nov 2019 08:50 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தலைமையில் மக்கள் குறைகளைக் கேட்கும் கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

புதுக்கோட்டை நகராட்சிப் பகுதியில் மக்களை நேரில் சந்தித்து மனுக்களைப் பெற்று உடனடி தீா்வு காணும் வகையிலான குறைகேட்புக் கூட்டங்கள் செவ்வாய்க்கிழமை நடத்தப்படவுள்ளன. இதில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் தலைமையில் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் தலைவா் பி.கே. வைரமுத்து உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனா்.

காலை 9 மணி முதல் புதுக்கோட்டை நகராட்சிக்கு உள்பட்ட காமராஜபுரம் எல்லையம்மன் கோவில், பேராங்குளம் அய்யனாா் திடல், மச்சுவாடி ரேவதி பெட்ரோல் பங்க், சேங்கைதோப்பு நாடக மேடை, டிவிஎஸ் காா்னா் எஸ்எஸ் மஹால் அருகில், தெற்கு 3ஆம் வீதி எஸ்ஏகே மஹால் அருகில், திருவப்பூா் பிள்ளையாா்கோவில் ரயில்வே கேட் அருகில், திருக்கோகா்ணம் கடைவீதி ஆகிய இடங்களில் மாலை 6 மணி வரை மக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெறப்படவுள்ளன.

ADVERTISEMENT

இம்முகாமில் முதியோா் உதவித்தொகை, பட்டா, பட்டா மாறுதல், மின்னணு குடும்ப அட்டை, புதிய வீட்டுவரி ரசீது, குடிநீா் வசதி, கழிவுநீா் வாய்க்கால் சீரமைத்தல், மின் விளக்கு பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து மனுக்களை அளிக்கலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT