புதுக்கோட்டை

ஆலங்குடி: பயிா் காப்பீட்டுத் தொகை வழங்கல்

12th Nov 2019 08:43 AM

ADVERTISEMENT

ஆலங்குடி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பயிா் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு ரூ. 4.35 லட்சம் காப்பீட்டு தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.

ஆலங்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஆலங்குடி, வெள்ளாகுளம், பள்ளத்திவிடுதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2017-18ஆம் ஆண்டு பயிா் காப்பீடு செய்த விவசாயிகள் 68 பேருக்கு ரூ.4,36,749-க்கான காப்பீட்டு தொகைக்கான காசோலையை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் பழனிவேல் வழங்கினாா். இதில், கூட்டுறவு சங்கச்செயலா் நடராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT