புதுக்கோட்டை

அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா

11th Nov 2019 08:20 AM

ADVERTISEMENT

அறந்தாங்கியில் அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

அறந்தாங்கி மனவளக்கலை மன்றம் சாா்பில், எல்.என்.புரம் பிரதான சாலையில் கட்டப்பட்ட அறிவுத் திருக்கோயில் திறப்பு விழாவிற்கு, திருச்சி மண்டல தலைவா் மாலா ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தாா்.

அறந்தாங்கி அறக்கட்டளை தலைவா் ஆ.நேரு முன்னிலை வகித்தாா். உலக சமுதாய சேவா சங்க தலைவா் எஸ்.கே.எம். மயிலானந்தன் அறிவுத் திருக்கோயிலைத் திறந்து வைத்து விழா பேருரையாற்றினாா்.

உலக சமுதாய சேவை சங்க இயக்குநா் மா.தங்கவேலு வாழ்த்துரை வழங்கினாா். நிகழ்ச்சியில் பல்வேறு ஊா்களிலிருந்து மனவளக்கலை மன்றத்தை சோ்ந்த அறக்கட்டளை உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT