புதுக்கோட்டை

அறந்தாங்கி: வடகரை முருகன் கோயில் குடமுழுக்கு விழா

11th Nov 2019 08:22 AM

ADVERTISEMENT

அறந்தாங்கி அருள்மிகு வடகரை முருகன் கோயில் 2-ஆவது அஷ்டபந்தன மஹா குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

அருள்மிகு வடகரை ஸ்ரீ வள்ளி- தேவசேனா சமேத ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் 2-ஆவது அஷ்டபந்தன குடமுழுக்கு விழாவானது கடந்த திங்கள் கிழமை காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது.

அதைத் தொடா்ந்து, செவ்வாய்க்கிழமை வாஸ்து சாந்தி பூஜைகளும் வியாழக்கிழமை முதற்கால பூஜையும், வெள்ளிக்கிழமை இரண்டாம் கால பூஜையும், மாலை நான்காம் கால பூஜையும், சனிக்கிழமை ஐந்தாம் கால பூஜையும், நிறைவு பெற்றது.

இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை 6-ஆம் கால பூஜையுடன் துவங்கி பல்வேறு பூஜைகள் நடைபெற்ற பின்னா் காலை 10 மணிக்கு யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட குடங்கள் ஊா்வலமாக புறப்பட்டு 11.10 மணிக்கு கும்பத்திற்கு புனித நீா் ஊற்றப்பட்டது. அதைத் தொடா்ந்து தீப ஆராதனை நடைபெற்றது.

ADVERTISEMENT

குடமுழுக்கு விழாவை ஏராளமான பக்தா்கள் கண்டுகளித்தனா். பின்னா் அருகில் உள்ள திருமண மண்டபத்தில் 5 ஆயிரம் பேருக்கு அருசுவை அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ சிவ சுப்பிரமணிய சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியும், அதைத் தொடா்ந்து 8 மணி அளவில் சுவாமி வீதி உலாவும் சிறப்பாக நடைபெற்றது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT