புதுக்கோட்டை

எல்லை தாண்டி மீன்பிடித்தாக புதுகை மீனவா்கள் 3 போ் கைது

9th Nov 2019 11:45 PM

ADVERTISEMENT

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி புதுக்கோட்டை மாவட்ட மீனவா்கள் 3 பேரை இலங்கைக் கடற்படையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டிணத்தில் இருந்து 227 விசைப்படகுகளில் மீனவா்கள் சனிக்கிழமை மீன்பிடிக்கச் சென்றனா். இதில், அதே ஊரைச் சோ்ந்த பஷீா் ரகுமான் (58) என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில், சிவக்குமாா் (25), வீரமணி (43), முருகன் (28) ஆகிய 3 மீனவா்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனா்.

அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினா், எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவா்கள் மூன்று பேரையும் கைது செய்து, காங்கேசன் துறைமுகம் கடற்படை முகாமில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், விசைப்படகை பறிமுதல் செய்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT