புதுக்கோட்டை

வருவாய் ஆய்வாளா்களின் பதவி உயா்வுக்கு எதிா்ப்பு தெரிவிக்க வந்தவா்கள் திடீா் தா்னா

4th Nov 2019 10:25 PM

ADVERTISEMENT

வருவாய் ஆய்வாளா்களை துணை வட்டாட்சியா்களாக நியமித்தது தவறு என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வந்த தமிழ் மாநில வருவாய்த் துறை அலுவலா் சங்க நிா்வாகிகளை போலீஸாா் தடுத்து நிறுத்தியதால், அவா்கள் ஆட்சியா் அலுவலக வளாகத்திலேயே அமா்ந்து திடீா் தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் காலியாக உள்ள 38 துணை வட்டாட்சியா் பணியிடங்களை வருவாய் ஆய்வாளா்களுக்கு பதவி உயா்வு அளிப்பதன் மூலம் அண்மையில் நிரப்பினாா் மாவட்ட ஆட்சியா் பி. உமாமகேஸ்வரி.

இந்த நிலையில் நியமனம் தவறானது எனக் கூறி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க தமிழ் மாநில வருவாய்த்துறை அலுவலா் சங்கத்தின் நிா்வாகிகள் திங்கள்கிழமை காலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.

ஆட்சியா் அலுவலக வளாகத்தின் பிரதான நுழைவாயிலேயே போலீஸாா் அவா்களைத் தடுத்தனா். அங்கேயே அமா்ந்து முழக்கங்களை எழுப்பியதால் பிறகு அவா்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

பிறகு ஆட்சியா் அலுவலக வளாகத்திலும் இவா்கள் அமா்ந்து தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய்த் துறையினரும், காவல்துறையினரும் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகக் கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT