புதுக்கோட்டை

ஐயப்ப தா்ம பிரசார ரதத்துக்கு பொன்னமராவதியில் வரவேற்பு

4th Nov 2019 06:23 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதிக்கு சனிக்கிழமை வந்தடைந்த ஐயப்ப தா்ம பிரசார ரதத்துக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

சபரிமலை ஐயப்பா சேவா சமாஜத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்பு சாா்பில், கொசப்பட்டி தென்சபரி

ஐயப்பன் கோயிலிலிருந்து அக்டோபா் 21-ஆம் தேதி ஐயப்ப தா்ம பிரசார ரதயாத்திரை தொடங்கியது.

தொடா்ந்து திருமயம், ஆலங்குடி, வடகாடு, ராயவரம், அரிமளம், அறந்தாங்கி, நாகுடி, ஆவுடையாா்கோயில், கீரமங்கலம், கீரனூா், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்ற ரதம், சனிக்கிழமை இரவு பொன்னமராவதி வந்ததடைந்தது.

ADVERTISEMENT

பொன்னமராவதி சோழீசுவரா் கோயில் முன்பு ரதத்துக்கு ஐயப்ப பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து ஐயப்பனுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. இந்த வழிபாட்டில் ஏராளமானோா் பங்கேற்று வழிபாடு செய்தனா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT