புதுக்கோட்டை

ஆலவயல் வேளாண் கூட்டுறவு சங்கக் கூட்டம்

1st Nov 2019 06:19 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயல் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க பேரவைக்கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்திற்கு சங்கத்தலைவா் பழனிச்சாமி தலைமை வகித்தாா். சங்கச் செயலா் பழனிச்சாமி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களை வாசித்தாா். கூட்டத்தில், 2017-18 சங்க லாபத்தொகை மற்றும் சங்கப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. துணைத் தலைவா் நிஜாா் அலி, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் அழகு, பழனிச்சாமி, சுப்பிரமணியன், காந்திமதி, மீனாட்சி, செல்வி, மலையாண்டி, கலைச்செல்வி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT