விராலிமலையில் ஜல்லிக்கட்டு: 15 பேர் காயம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 645 காளைகள்,

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டில் 645 காளைகள், 135 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். இதில் காளைகள் முட்டியதில் 15 பேர் காயமடைந்தனர்.
விராலிமலை அருள்மிகு மெய்க்கண்ணுடையாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்தப்படுவது வழக்கம். நிகழாண்டுக்கான ஜல்லிக்கட்டுப் போட்டி செவ்வாய்க்கிழமை காலை தொடங்கியது. 
முன்னதாக வாடிவாசல் முன்பு, இலுப்பூர் கோட்டாட்சியர் சி. கீதா, இலுப்பூர் காவல் துணை கண்காணிப்பாளர் சிகாமணி முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காலை 8.30 மணிக்குத் தொடங்கிய ஜல்லிக்கட்டுப் போட்டியில் முதலாவதாக கோயில் காளைகளும்,  பின்னர் மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டது.
போட்டியைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்திருந்தனர். போட்டியில் சீறிப் பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்கினர். இதில் 15-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அவர்களுக்கு அப்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில் உடனடியாக சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com