அறந்தாங்கியில் சிசிடிவி  கேமராக்கள் பொருத்த முடிவு

அறந்தாங்கி நகர் முழுவதும் அறந்தை ரோட்டரி சங்கம் சார்பில் 200 இடங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதென முடிவு செய்யப்பட்டது.  

அறந்தாங்கி நகர் முழுவதும் அறந்தை ரோட்டரி சங்கம் சார்பில் 200 இடங்களில் சிசிடிவி கேமரா அமைப்பதென முடிவு செய்யப்பட்டது.  
அறந்தாங்கி சமூக சங்கம் (ஏசிசி) முகநூல் அமைப்பின் கூட்டம் டிஎன்.எஸ் மண்டபத்தில் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக அறந்தாங்கி துணை காவல் கண்காணிப்பாளர் சி.கோகிலா, வட்டாட்சியர் சூரியபிரபா, நகராட்சி ஆணையர் வினோத், நெடுஞ்சாலை துறை சாலை ஆய்வாளர் சந்திரசேகர் மற்றும அறந்தாங்கி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் ஆர்.தங்கராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில், அறந்தை ரோட்டரி சங்கம் சார்பில் நகரின் 200 இடங்களில் சிசிடிவி கேமரா வசதியுடன் அமைத்து தரப்படும். வர்த்தக சங்கம் சார்பில்  2 குளங்களை தூர்வாருதல், அறந்தாங்கி நகராட்சி சார்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைத்தல், நெடுஞ்சாலை துறை சார்பில் பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை சாலையின் நடுவே தடுப்புச் சுவர் அமைத்து சாலை அகலப்படுத்தி நடைபாதை அமைக்கப்படும் என்றும்
காவல்துறை சார்பில் 5 இடங்களில் போக்குவரத்து காவல் மையம் அமைத்தல் ஆகிய கோரிக்கைகள் பல்வேறு துறை அதிகாரிகளால் உறுதியளிக்கப்பட்டது. கூட்டத்தில், வர்த்தக சங்கப் பிரதிநிதிகள், ரோட்டரி சங்கம்,  கராத்தே பிரதர்ஸ், ஆத்மா சமூக சேவை நிறுவனம் உள்ளிட்ட பல்வேறு சமூக பிரதிநிதிகள் மற்றும் கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com