புதுக்கோட்டை ஜெஜெ கலை அறிவியல் கல்லூரி, உயிர்வேதியியல் துறை சார்பில் "உயிர் ஆரோக்கியத்திற்கான ஆய்வுகளும், பாதிப்புகளும்' என்னும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.
துறைத் தலைவர் எஸ். கனிதா வரவேற்றார். கருத்தரங்க சிறப்பு அழைப்பாளராக சிங்கப்பூர் ஏஇ இன்டர்நேஷனல் நிறுவனத்தின் நிறுவனர் பி. ராமநாதன் கலந்து கொண்டு பேசினார்.
முலக்கூறு சிகிச்சையில் நவீன முறையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேற்கத்திய நாடுகளில் மேற்கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் அவர் விரிவாக எடுத்துரைத்தார்.
ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்கள் சுகாதாரம் மற்றும் சமுக நலத் துறை மாதிரியான துறைகளைத் தேர்வு செய்து நாட்டின் முன்னேற்றத்துக்காக செயல்பட வேண்டும் என்றார் ராமநாதன். இக்கருத்தரங்கில் உயிர் வேதியியல் துறை, உயிர் தொழில்நுட்பவியல் துறை, நுண்ணுயிரியல் துறை மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டனர்.