புதுக்கோட்டை

புகையிலை பொருள் விற்பனை: வியாபாரி கைது

31st Jul 2019 10:06 AM

ADVERTISEMENT

இலுப்பூரில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களை விற்பனை செய்த பெட்டிக்கடை உரிமையாளரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
முன்னதாக, இலுப்பூர் வடுகர் தெருவில் உள்ள பெட்டிக்கடையில் புகையிலை பொருள்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 
இதையடுத்து காவல் ஆய்வாளர் ஜெயராமன் தலைமையிலான போலீஸார் பெட்டிக்கடையில் சோதனை மேற்கொண்டனர். இதில் புகையிலை பொருள் விற்பனை நடைபெறுவது உறுதியானதைத் தொடர்ந்து, கடையின் உரிமையாளர் சாம்பசிவம் மகன் ராஜாமாறனை(37) போலீஸார் கைது செய்தனர். கடையில் இருந்த புகையிலைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மதுபானம் விற்றவர்கள் கைது: அன்னவாசல் அருகேயுள்ள பிள்ளையார்பட்டி நால்ரோடு, கோல்டன் நகர் மற்றும் கருப்பர்மலை பகுதியில் சிலர் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையிலான போலீஸார் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது நால்ரேடு பகுதியில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட மணி மகன் கார்மேகம்(38), கருப்பர்மலையில் கிருஷ்ணன் மகன் மோகன்(39), கோல்டன் நகரில் சிதம்பரம் மகன் அடைக்கலம்(38) ஆகிய 3 பேரை கைது செய்தனர். விற்பனைக்காக வைத்திருந்த 43 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.                 

ADVERTISEMENT
ADVERTISEMENT