புதுக்கோட்டை

சர்வதேச புலிகள் தின கொண்டாட்டம்

30th Jul 2019 09:44 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே வலையபட்டியில் உள்ள சிதம்பரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் சர்வதேச புலிகள் தினம் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
புலிகள் இனத்தை காப்பது தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற நிகழ்வில் மாணவ, மாணவியர் புலி போல வேடமிட்டு பங்கேற்றனர். புலிகள் குறித்த விழிப்புணர்வு கருத்துக்கள் எடுத்துக்கூறப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் வே.முருகேசன், தனி அலுவலர் நெ.ரா.சந்திரன், துணை முதல்வர்கள் வைதேகி, கலைமதி ஆகியோர் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT