புதுக்கோட்டை

மாசாத்து அய்யனார் கோயிலில் சிறப்பு வழிபாடு

29th Jul 2019 10:38 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள கொன்னைப்பட்டி மாசாத்து அய்யனார் கோயிலில் 12 ஆம் ஆண்டு அபிஷேக, ஆராதனை விழா மற்றும் அன்னதான விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவின் தொடக்கமாக மாசாத்து அய்யனாருக்கு பால், பழங்கள், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், கொன்னைப்பட்டி மற்றும் சுற்றுகிராம மக்கள் திரளாகப் பங்கேற்று வழிபட்டனர்.  விழா ஏற்பாடுகளை அன்னதான விழாக்குழுவினர் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் செய்திருந்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT