புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் கம்பன் பெருவிழா நிறைவு

29th Jul 2019 10:37 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டையில் கடந்த 19ஆம் தேதி தொடங்கிய 10 நாள் கம்பன் பெருவிழா ஞாயிற்றுக்கிழமையுடன் பட்டிமன்றத்துடன் நிறைவடைந்தது.
நிறைவு நாள் நிகழ்ச்சியில் விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான் தலைமை வகித்துப் பரிசுகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கவிஞர் தங்கம் மூர்த்தி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் இரா. சின்னத்தம்பி உள்ளிட்டோரும் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்தினர்.
தொடர்ந்து "கம்பன் காப்பியத்தில் பெரிதும் போற்றப்படுவது பணிவா? துணிவா?' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. 
பேராசிரியர் கு. ஞானசம்பந்தன் நடுவராக செயல்பட்டார். "பணிவே' என்ற அணியில் ஈரோட்டைச் சேர்ந்த கோ.பா. ரவிக்குமார், புதுக்கோட்டை ச. பாரதி ஆகியோரும், "துணிவே' என்ற அணியில் ராஜபாளையத்தைச் சேர்ந்த ரெ. ராஜ்குமார், திருச்சி சோ. மனோன்மணி ஆகியோரும் பேசினர். 
முன்னதாக கம்பன் கழகச் செயலர் ரா. சம்பத்குமார் வரவேற்றார். முடிவில் புத்தாஸ் வீரக்கலைகள் மன்றத்தின் நிர்வாகி சேது கார்த்திகேயன் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT