கந்தர்வகோட்டை ஒன்றியம் முதுகுளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
வட்டாட்சியர் கோ. கலைமணி தலைமை வகித்தார். துணை வட்டாட்சியர் செல்வகணபதி, துணை வட்டாட்சியர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் பட்டா மாறுதல் தொடர்பாக 8 மனுக்கள், இலவச வீட்டு மனைப் பட்டா கேட்டு 3 மனுக்கள், குடிநீர் வசதி கேட்டு 3 மனுக்கள் உள்ளிட்ட 31 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது. முகாமில் புதுநகர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சந்தோஷ், வருவாய் ஆய்வாளர் உமாவதி, விஏஓ முனியப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விராலிமலையில்... விராலிமலை அருகேயுள்ள மதயாணைப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விராலிமலை வட்டாட்சியர் ஜெ. சதீஸ்சரவணகுமார் தலைமை வகித்தார். இதில் மொத்தம் 20 மனுக்கள் பெறப்பட்டன. பொது மக்களுக்கு இ அடங்கலை கணினியில் பதிதல், இயற்கை இடர்பாடுகள் குறித்து செயலி மூலம் விளக்கப்பட்டது. பிரதம மந்திரி கிசான் திட்டம் தொடர்பாகவும் விளக்கப்பட்டது. முகாமில் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.