புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தில் வெள்ளிக்கிழமை 200 பனங்கன்றுகள் நடும் நிகழ்வு நடைபெற்றது.
தமிழக அரசின் நிலத்தடி நீர் மேலாண்மை திட்டத்தின்படி குளக்கரைகளில் பனைமரக்கன்றுகள் நடும் திட்டத்தின் படி கொல்லன்வயல் குளக்கரையில் நடந்த நிகழ்ச்சியில் அறந்தாங்கி ரோட்டரி கிளப் தலைவர் க. சுரேஷ்குமார், துணை ஆளுநர் ஆ. கராத்தே கண்ணையன், வருங்காலத் தலைவர் கே.எஸ். ராமன்பரத்வாஜ் மற்றும் ரோட்டரி நிர்வாகிகள், கிராம முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். பனங்கன்றுகளை பராமரிக்கும் பொறுப்பு மகளிர் சுய உதவிக் குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.