கந்தர்வகோட்டையில் நீதிமன்றம் அமைக்க தற்காலிக இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றப் பணிக்காக கந்தர்வகோட்டையிலிருந்து புதுக்கோட்டைக்கு செல்ல வேண்டியிருந்ததால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்த நிலையில், தாலுகாவிற்கு ஒரு நீதிமன்றம் என்ற அரசு கொள்கை முடிவின்படி கந்தர்வகோட்டையில் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றம் அமைக்க பல ஆண்டுகளாக இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இதையடுத்து கந்தர்வகோட்டை செட்டிதெருவில் உள்ள தனியார் கட்டத்தில் நீதிமன்றத்தை தற்காலிகமாக அமைக்க முடிவு செய்யப்பட்டு, மாவட்ட முதன்மை நீதிபதி இளங்கோவன் அங்கு பார்வையிட்டார். வட்டாட்சியர் கோ. கலைமணி, விஏஓ தெ. கருப்பையா, உதவியாளர் செந்தில் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.