புதுக்கோட்டை நகரக் காவல் நிலையம் சார்பில் போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவுப் போட்டி (வாலிபால்) புதன்கிழமை நடைபெற்றன.
புதுக்கோட்டை ஆயுதப் படை திடலில் நடைபெற்ற இந்தப் போட்டியில், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி, காவல் துறை அணி, பொதுமக்கள் அணி, மன்னர் கல்லூரி அணிகள் பங்கேற்றன. பொதுமக்கள் அணியில், பெரியார் நகர், கம்பன் நகர், பூங்கா நகர் ஆகியவற்றைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றிருந்தனர். இதில், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி முதலிடத்தையும், காவல்துறை அணி இரண்டாம் இடத்தையும் பெற்றன.
புதுக்கோட்டை நகரத் துணைக் காவல் கண்காணிப்பாளர் பா. ஆறுமுகம் பரிசுகளை வழங்கினார். ஆய்வாளர்கள் பர வாசுதேவன், அப்துல்ரகுமான், உதவி ஆய்வாளர் பூர்விகா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.