புதுக்கோட்டை

வன்னியன்விடுதியில் புரவி எடுப்பு விழா

16th Jul 2019 09:22 AM

ADVERTISEMENT

ஆலங்குடி அருகிலுள்ள வன்னியன்விடுதியில், சுமார் 100 ஆண்டுகளுக்குப் பிறகு புரவி எடுப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கிராமத்திலுள்ள  வாழபிராமணர் அய்யனார் கோயிலில் ஆண்டுதோறும் புரவி எடுப்பு விழா நடத்துவது வழக்கம். இவ்விழா நடத்துவதன் மூலம் மழை பெய்யும், விவசாயம் செழிக்கும் என்ற நம்பிக்கையில் அப்பகுதியினர் இந்நிகழ்ச்சியை நடத்தி வந்தனர். பல்வேறு காரணங்களால் கடந்த 100 ஆண்டுகளாக இவ்விழா நடத்தப்படவில்லை
  இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாய் மழையின்றி  வறட்சி ஏற்பட்டதையடுத்து, நிகழாண்டு புரவி எடுப்பு விழா நடத்த ஊர் கூடி  முடிவெடுக்கப்பட்டது.   அதன்படி, அறந்தாங்கி அருகிலுள்ள துவரடிமனையில்  மண்ணால் செய்யப்பட்ட 7 குதிரைகள், 2 காளை, 1 யானை,பத்திரகாளி, தொட்டிச்சி, மகாகாளி, முனி, வீரபத்திரர்  உள்ளிட்ட 21 சிலைகளை அப்பகுதி மக்கள் ஊர்வலமாக சுமந்து வந்தனர். கோயிலுக்கு அருகே சுமார் 300 மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டு சிலைகளுக்கு கண் திறக்கப்பட்டது. பின்னர், அங்கிருந்து மீண்டும் எடுத்துவரப்பட்டு   கோயிலில் நிலைநிறுத்தப்பட்டது. அப்போது, லேசான மழை பெய்தது மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT