புதுக்கோட்டை மாவட்டம், அரிமளத்தில் அதிகபட்சமாக 43.40 மி.மீ. மழை பெய்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மாலை நேரங்களில் சில பகுதிகளில் லேசாகவும், அதிகமாகவும் மழை பெய்து வருகிறது. இதன்படி, ஞாயிற்றுக்கிழமை மாலையும், இரவும் மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது.
திங்கள்கிழமை காலை 8 மணி வரை பதிவான மழையளவு விவரம் ( மி.மீட்டரில்):
அரிமளம்- 43.40 மி.மீ, காரையூர்- 7, கீழாநிலை- 4.20, இலுப்பூர்- 3, கீரனூர்- 2.80, புதுக்கோட்டை - 2, பொன்னமராவதி- 1 மி.மீ. மற்ற இடங்களில் பதிவாகும் அளவுக்கு மழை பொழியவில்லை.