புதுக்கோட்டை

பேருந்து மோதி இளைஞர் சாவு

15th Jul 2019 08:48 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை டிவிஎஸ் கார்னர் அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சியிலிருந்து புதுக்கோட்டை வழியாக காரைக்குடி செல்லும் தனியார் பேரு ந்து ஒன்று பேருந்து நிலையம் நோக்கி ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதி அருகே வந்தபோது, இரு சக்கர வாகனம் ஒன்றின் மீது அந்தப் பேருந்து மோதியது. 
இதில் அடப்பன்வயலைச் சேர்ந்த மைதீன் பாட்சா மகன் முகமது மீரான் (24) தலை நசுங்கி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக, நகரக் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT