புதுக்கோட்டை

திராவிடர் கழக பிரச்சாரக் கூட்டம்

15th Jul 2019 08:48 AM

ADVERTISEMENT

பொன்னமராவதியில் திராவிடர் கழகத்தின் சார்பில் மணியம்மையார் நூற்றாண்டு விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, திராவிடர் கழக மகளிர் பாசறைத் தலைவர் சி.ராசி தலைமை வகித்தார். மாவட்ட மகளிர் பாசறை செயலர் சொ.ஞானசுந்தரி வரவேற்றார். மண்டல செயலர் சு.தேன்மொழி, மாவட்ட மகளிர் அணி தலைவர் வீர.வசந்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மாநில மகளிர் பாசறை அமைப்பாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். நிர்வாகிகள் சி.சண்முகப்பிரியா, ஆ.அமுதா, ஆ.சரவணன், க.ஆறுமுகம், ரா.சரசுவதி, இ.இளவரசி, சு.சுதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT