புதுக்கோட்டை

நீர்நிலைகளை தூர்வார  புதுமண தம்பதி நன்கொடை

12th Jul 2019 07:10 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் நீர்நிலைகள் தூர்வாரும் பணிக்கு புதுமண தம்பதியினர் மணக்கோலத்தில் வியாழக்கிழமை நன்கொடை வழங்கினர்.
 கொத்தமங்கலத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து அப்பகுதியில் உள்ள குளங்கள், அணைக்கட்டுகள், வரத்துவாரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளை சொந்த செலவில் தூர்வாரி வருகின்றனர். 60 நாள்களை கடந்து நடைபெற்று வரும் பணிக்கு கிராமத்தினர் நிதியுதவி வழங்கி வருகின்றனர். 
 இந்நிலையில், இளைஞர்களை ஊக்கும்விக்கும் விதமாக வியாழக்கிழமை கொத்தமங்கலத்தில் திருமணம் செய்து கொண்ட த.பாலமுருகன், வி.கார்த்திகா தம்பதியினர், மணமேடையில் வைத்து தன்னார்வ இளைஞர்களிடம் ரூ.6 ஆயிரம் நன்கொடை வழங்கினர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT