புதுக்கோட்டை

மக்காச்சோளத்தில் பட்டுப்புழு தாக்குதலை தடுக்க ஆலோசனை

6th Jul 2019 07:14 AM

ADVERTISEMENT

கந்தர்வகோட்டை வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழு தாக்குதலை தடுக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு வியாழக்கிழமை ஆலோசனை வழங்கப்பட்டது. 
கந்தர்வகோட்டை வட்டாரத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டுள்ள மட்டங்கால், அக்கச்சிப்பட்டி,பெரியகோட்டை, புதுப்பட்டி, சங்கம்விடுதி கிராமங்களில் வேளாண்மை உதவி இயக்குநர் மு. சங்கரலட்சுமி மற்றும்  குடுமியான்மலை வேளாண்மைக் கல்லூரி பூச்சியியல் பேராசிரியர் சுகன்யா கண்ணன் ஆகியோர் வயலாய்வு மேற்கொண்டு மக்காச்சோளத்தில் பட்டுப்புழு தாக்குதல் குறித்தும், அதனை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துக் கூறினர். 
மக்காச்சோளம் சாகுபடிக்கு முன் ஆழமான உழவு செய்வதன் மூலம் மண்ணிலுள்ள கூட்டுப்புழுக்கள் வெளிப்படும் பொழுது சூரியஒளி மற்றும் பறவைகளால் அவை அழிக்கப்படும். அவ்வாறு செய்வதால் அந்தப்பூச்சி உருவாதலை தடுத்து மேற்கொண்டு அடுத்த பயிரிடும் பருவத்திற்கு பாதிப்பு வராமல் தடுக்க முடியும். உழவு செய்யும்பொழுது ஏக்கருக்கு 250 கிலோ வேப்பம் புண்ணாக்கு மண்ணில் இடுவதன் மூலம் கூட்டுப்புழுக்களை கட்டுப்படுத்தி அந்தப்பூச்சி வெளிவருவதை தடுக்க இயலும்.
 ஒரு கிலோ மக்காச்சோள விதைக்கு 10 கிராம் நுண்ணுயிர் பூச்சி கொல்லியான பிவோல்யா பேசியானா அல்லது 10 கிராம் இமிடாகுளோபிட்ல்ட் 70  அல்லது 10 கிராம் தயோமீதாக்சம் 70  கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். குறைவான பயிர் இடைவெளியால் பயிர்களுக்கிடையே படைப்புழு வேகமாக பரவ வாய்ப்பு உள்ளது. எனவே மக்காச்சோள பயிற்குளுக்கு நன்கு இடவெளி விட்டு பயிரிட வேண்டும் என்று அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கினர். 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT