பொன்னமராவதி நகர பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை குறித்த ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு நகரத்தலைவர் எம். சேதுமலையாண்டி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ராம.சேதுபதி முன்னிலை வகித்தார். உறுப்பினர் சேர்க்கை இணைப்பொறுப்பாளர் ஆர்கே.மணிராஜா பங்கேற்று திரளான உறுப்பினர்களை பாஜகவில் இணைக்க வலியுறுத்தி பேசினார். மாநில செயற்குழு உறுப்பினர் பி.பாஸ்கர், மாநில பொதுக்குழு உறுப்பினர் எம்.குமரன், மாவட்ட அமைப்பு பொதுச்செயலர் ரெங்கசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.வெள்ளைச்சாமி, நகர இளைஞரணி தலைவர் கோ.சக்திவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.