புதுக்கோட்டை

பண மோசடி: நிதி நிறுவனம் மீது புகார்

4th Jul 2019 09:13 AM

ADVERTISEMENT

சேமிப்புத் திட்டத்தில் கவர்ச்சிகரமான வட்டி தருவதாகக் கூறி ரூ. 4 கோடி வரை வசூலித்து ஏமாற்றியதாக வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிறுவனத்தினர் மீது புதுக்கோட்டை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸில் புதன்கிழமை புகார் அளிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி நாகுடி, அரியமரக்காடு பகுதியைச் சேர்ந்த சரவணன் மற்றும் பலர் புதன்கிழமை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வந்தனர். இந்த வளாகத்திலுள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு துணைக் கண்காணிப்பாளரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:  
வேலூர் கிருஷ்ணா நகரைச் சேர்ந்த ராயல் அக்ரோ டெய்ரி நிறுவனத்தின் இயக்குநர் தியாகராஜன் எங்களைத் தொடர்பு கொண்டார். தங்களது நிறுவனத்தில் சிறுசேமிப்புத் திட்டத்தில் பணம் செலுத்தினால், அதிக வட்டியுடன் திருப்பித் தருவதாக அவர் கூறினார். 
இதையடுத்து, 500 முகவர்கள், 2 ஆயிரம் வாடிக்கையாளர்களைச் சேர்த்து ரூ. 4 கோடி வரை சிறுசேமிப்புத் திட்டம் என்ற பெயரில் வாங்கிக் கொடுத்தேன். எனது சொந்தப் பணம் ரூ. 1.50 லட்சமும் செலுத்தியிருந்தேன். ஆனால், காலம் முடிவடைந்த பிறகும் முதிர்வுத் தொகையைத் திருப்பித் தர மறுக்கிறார்கள். 
தொடர்ச்சியாக பல முறை கேட்டும் பணம் கிடைக்கவில்லை. இந்த நிலையில் அந்த நிறுவனத்தில் இருந்து மிரட்டல் வேறு வருகிறது.எனவே, எங்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தைத் திரும்பப் பெற்றுத் தர வேண்டும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT