புதுக்கோட்டை

குடிமராமத்துப் பணிகள் ஆலோசனை

4th Jul 2019 09:16 AM

ADVERTISEMENT

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ. 20.27 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ள 66 குடிமராமத்துப் பணிகள் குறித்து விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டார்.
பாசனதாரர்கள் சங்கம் மூலம் மேற்கொள்ளப்படும் இந்தப் பணிகளில், கண்மாய்கள் தூர்வாருதல், வாய்க்கால்கள் தூர்வாருதல், கரைகளை உயர்த்துதல், அடைப்பு பலகைகளை எடுத்தல், பழுதடைந்த கட்டுமானங்களைப் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் செய்யப்படும் என ஆட்சியர் விளக்கினார். இப்பணிகளை மேற்கொள்ள ஆர்வமுள்ள பாசனதாரர் சங்கங்கள் பொதுப்பணித் துறை பாசனப் பிரிவு செயற்பொ றியாளர் அலுவலகத்தை அணுகலாம் என்றும் ஆட்சியர்  தெரிவித்தார். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர்கள் சரவணன், முருகேசன், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் ஜி.எஸ். தனபதி, துரைமாணிக்கம், ராமகிருஷ்ணன், ராஜகோபால் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT