புதுக்கோட்டை

விநாயகர் கோயில்  வருடாபிஷேகவிழா

2nd Jul 2019 09:26 AM

ADVERTISEMENT

பொன்னமராவதி அருகே உள்ள மாங்காளிப்பட்டி சித்தி விநாயகர் கோயில் வருடாபிஷேகவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
விழாவில் விநாயகருக்கு பால், பழங்கள், பன்னீர், மஞ்சள், சந்தனம் என 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. 
மேலும் சித்தி விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 
விழாவில் மாங்காளிப்பட்டி சுற்றுவட்டார கிராம மக்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT