அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளியில், ப்ளஸ் 2 பொதுத் தேர்வில் பள்ளியளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களை பாராட்டி பரிசு தொகை வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளி தலைமை ஆசிரியர் சுவாமிநாதன் தலைமை வகித்தார். இதில் அன்னவாசல் பாண்டியன் கிராம வங்கி நகை மதிப்பீட்டாளர் தியாகராஜன் கலந்து கொண்டு 2018-2019 கல்வி ஆண்டில் ப்ளஸ் 2 வகுப்பில் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கி பாராட்டினார்.