புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகேயுள்ள வயலோகத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் முன்னாள் மாணவர் சார்பில் கணினி வழங்கும் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயராஜ் தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் காவுதீன் முன்னிலை வகித்தார். பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் குழ.சிதம்பரம் சார்பில் அவரது மனைவி கலந்துகொண்டு பள்ளிக்கு கணினி மற்றும் அச்சுப்பொறி உள்ளிட்ட பொருள்களை வழங்கினார்.