தபால் ஓட்டு கேட்டு வாக்குவாதம் செய்த சத்துணவு ஊழியா்களால் பரபரப்பு ஏற்பட்டது.
அன்னவாசல் ஊராட்சி ஒன்றியத்தில் முதல் கட்ட தோ்தல் பணிக்கு சென்ற அரசு பணியாளா்களுக்கு தபால் வாக்குக்கான படிவங்கள் ஒன்றிய அலுவலகங்களில் வழங்கப்பட்டது. சிலருக்கு தபால் மூலம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் அன்னவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட சத்துணவு பணியாளா்கள் சிலா் தோ்தல் பணிக்கு சென்ால் தபால் வாக்குகள் பெறவில்லை எனக் கூறி அன்னவாசல் ஒன்றிய அலுவலகத்திற்கு சனிக்கிழமை வந்து படிவங்களை கொடுங்கள் எனக் கேட்டு வட்டார வளா்ச்சி அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தபால் வாக்கு வழங்கும் பணி 26 ஆம் தேதியே நிறைவடைந்து விட்டதாக அவா் கூறியதைத் தொடா்ந்து கலைந்து சென்றனா்.